தடை தாண்டி மேலெழுந்த நினைவு தூபி!
மே 18 இனஅழிப்பினை முன்னிட்டு யாழ்.பல்கலையில் கட்டப்பட்டு வந்த நினைவு தூபி நிர்மாணப்பணிகள் முடிவுக்கு வந்துள்ளன.பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு,ஜனாதிபதி செயலகம் மற்றும் உயர்கல்வி அமைச்சு பகிரங்க எச்சரிக்கை விடுத்து நினைவு தூபி நிர்மாணப்பணிகளை தடுத்து நிறுத்தியிருந்தன.
இவ்வாறு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி யாழ்.பல்கலையில் நிறுவபபட்டால் தெற்கில் சிங்கள மாணவர்கள் போர்வெற்றி வீரர்களிற்கு சிலை வைப்பார்களனெ ஜனாதிபதியின் செயலாளர் எச்சரித்துமிருந்தார்.
இந்நிலையில் சத்தம் சந்தடியின்றி நினைவு தூபி பணிகள் இரவு பகலாக முன்னெடுக்கப்பட்டு முடிவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் மாபெரும் இன அழிப்பின் அடையாளமான முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நினைவு கூரும் வகையில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவாலயத்திலும் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று மாலை இடம்பெற்றது.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் மாலை 6.00 மணிக்கு இடை நடுவில் நிறுத்தப்பட்ட நினைவாலயப் பகுதியில் கூடி, சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தினர்.
நினைவாலயத்தின் பொதுச் சுடரைப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கிருஸ்ணமீனன் ஏற்றி வைக்க கூடி நின்ற மாணவர்கள் அடுக்கி வைக்கப்பட்ட சுடர்களை ஏற்றினர். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.
Post a Comment