Header Ads

test

நினைவேந்தலிற்கு செல்ல அனுமதி:கல்வி அமைச்சர்!

நாளை வடமாகாண பாடசாலைகளிற்கு விடுமுறை இல்லாத போதும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் நேரடியாக பாதிக்கப்பட்ட உறவுகள் நேரில் சென்று முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்த தடையில்லையென கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்தார்.

நாளை வட மாகாண கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடுவதுடன்  காலை பாடசாலைகளில் அகவணக்கம் செலுத்தவும் கல்வி அமைச்சரால் கோரப்பட்டுள்ளது. கல்வித்திணைக்களம் உட்பட ஏனைய அரசு திணைக்களங்களுக்கோ பாடசாலைகளிற்கோ விடுமுறை இல்லை.

இதனால் நாளைய தினம் எத்தகைய பயிற்ச்சிப்பட்டறைகளை நடத்தவோ கூட்டங்களை நடத்தவோ தடையில்லையென மேலும் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் வடமாகாண பாடசாலைகளிற்கு விடுமுறை இல்லாத போதும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் நேரடியாக பாதிக்கப்பட்ட உறவுகள் நேரில் சென்று முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்த தடையில்லையெனவும் தெரிவித்தார்.

No comments