பிணவறையில் உயிர்த்துக்கொண்ட பெண்! அதிர்ச்சியில் உறவினர்
ஹோமாகம பிரதேசத்தில் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட பெண் ஒருவரின் சடலம் பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது, விழித்துக் கொண்ட அதிர்ச்சி சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
மத்தேகொட கிரிகம்பமுனுவ பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் வயிற்று வலி காரணமாக, ஹோமகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, மருத்துவர்கள் பரிசோதனை செய்ததுடன் தாதியொருவர் ஊசி ஒன்றை ஏற்றியுள்ளார்.
அதன் பின்னர் குறித்த பெண் அசைவின்றி காணப்பட்டுள்ள நிலையில், அப் பெண் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வைத்தியசாலையில் இருந்த பெண்ணின் உறவினர்கள், ஏனைய உறவினர்களுக்கும் மரணம் பற்றி அறிவித்துள்ளனர்.
பின்னர், குறித்த பெண்ணின் சடலத்தையும் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் பிரேத அறைக்கு எடுத்துச் சென்ற போது, செல்லும் வழியில் குறித்த சடலத்தின் கால் ஒன்று அசைவதனை உறவினர் ஒருவர் கண்டுள்ளார். அதன் பின்னர் குறித்த பெண்ணை உறவினர்கள் பொறுப்பேற்றுக் கொண்டு தனியார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும், பெண்ணின் உடல் நிலை மோசமாகவே காணப்படுகின்றது என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இதன் போது குறித்த வைத்தியர்கள், மற்றும் தாதியினரின் அசமந்தபோக்கை பெண்ணின் உறவினர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர்.

Post a Comment