Header Ads

test

ஏழாலையில் பேருந்து மீது தாக்குதல்! பதற்றத்துடன் தப்பியோடிய பயணிகள்!

ஏழாலை ஊடாக குப்­பி­ளா­னுக்­குப் பய­ணித்த தனி­யார் பய­ணி­கள் பேருந்தை சில இளை­ஞர்­கள் வழி்­ம­றித்து தாக்­கி­னர். பேருந்­தில் பயணித்த பய­ணி­கள் பதற்­றத்­து­டன் சிதறி ஓடி­னர். இந்­தச் சம்­ப­வம் நேற்று நடந்­துள்­ளது.

யாழ்ப்­பா­ணத்­தில் இருந்து ஏழாலை ஊடாக குப்­பி­ளா­னில் பய­ணிக்­கும் பேருந்­தின் நடந்­து­நர் ஒரு­வ­ரு­டன் அந்­தப் பகுதி இளை­ஞர் ஒரு­வர். முரண்­பட்­டுள்­ளார். முரண்­பட்­ட­வர்­கள் மாலை 6.30 மணி­ய­ள­வில் பேருந்தை வழி மறித்து நடத்­து­நரை தேடி­யுள்­ள­னர். அந்த நடத்­து­நர் இல்­லா­த­தால் பேரூந்­தின் கண்­ணா­டியை அடித்து நொறுக்­கி­யுள்­ள­னர்.

இளை­ஞர்­கள் பய­ணி­கள் பேருந்தை அடித்து நொருக்­கும் ­போது பேருந்துக்­குள் பய­ணி­கள் இருந்­துள்­ள­னர். கண்­ணா­டி­களை நெருக்கியபோது பய­ணி­கள் பல­ருக்கு கண்­ணா­டிச் சித­றல்­கள் தாக்கியுள்­ளன. அச்­ச­ம­டைந்த பய­ணி­கள் பேருந்தை விட்­டுக் குதிச்­சுந் தப்­பி­யோ­டி­னர்.

No comments