மன்னார் மாவட்டச் செயலராக மீண்டும் சிங்களவர் ஒருவரையே நியமிக்க உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களுக்கும் தமிழர்களை மாவட்டச் செயலர்களாக நியமிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொள்கையளவில் இணக்கம் தெரிவித்திருந்தார். இந்த நிலையிலும் அதனை மீறி சிங்களவர் ஒருவரே மன்னார் மாவட்டத்தின் மாவட்டச் செயலராகத் தற்போது சிபார்சு செய்யப்பட்டுள்ளார். இதுதவிர, முல்லைத்தீவு மாவட்டச் செயலர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன் கிளிநொச்சி மாவட்டச் செயலராவும், கிளிநொச்சி மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் அமைச்சு ஒன்றின் செயலாளராகவும் நியமிக்கப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.
Post a Comment