வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோன் உன் உடனான சந்திப்பை ரத்துச் செய்வதற்கு தான் தீர்மானித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார். இதன்படி, எதிர்வரும் ஜூன் 12 ஆம் திகதி சிங்கப்புரில் நடைபெறவிருந்த சந்திப்பு நடைபெற மாட்டாதென டிரம்ப் தெரிவித்துள்ளது. வடகொரியாவிலிருந்து தொடர்ச்சியாக பிரயோகிக்கப்பட்டுவந்த அழுத்தங்கள் காரணமாக சந்திப்பை ரத்து செய்யவேண்டி ஏற்பட்டதாக டிரம்ப் ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் தான் வடகொரிய ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றும் அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வலிந்து கொடுத்து வடகொரியாவுடன் பேச்சுவார்த்தைக்குப் போன அமெரிக்கா, பேச்சுவார்த்தையை எப்படியாவது நடாத்த வேண்டும் என்பதற்காக இரு நாட்டுத் தலைவர்களின் படங்களுடன் நினைவு நாணயம் ஒன்றையும் வெளியிட்டிருந்தது. பின்னர், மூக்குடைபட்ட நிலையில் தானாகவே வாபஸ் வாங்கியுள்ளமை அமெரிக்காவின் பின்னடைவைக் காட்டுவதாக அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்
Post a Comment