Header Ads

test

பத்து வருடங்களாக கட்டப்பட்ட கலாச்சார மண்டபம்!


இலங்கை அரசினால் பத்தாண்டுகளாக கட்டப்பட்டு வந்த கலாச்சார கட்டடம் ஒன்று எம்.ஏ.சுமந்திரனின் பிரசன்னத்தில் உயர் கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.உள்ளுர் அமைச்சர் விஜகலாவும் பங்கெடுத்த போதும் மக்கள் எவரும் எட்டிக்கூட பார்த்திராத நிலையில் அரச பணியாளர்களது பிரசன்னத்தில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.


உடுப்பிட்டியினில் கட்ட ஆரம்பிக்கப்பட்ட கலாச்சார கட்டட நிர்மாணவேலைகள் ஆமை வேகத்தில் பத்துவருடங்களிற்கு மேலாக இழுபறிப்பட்டிருந்தது.

இந்நிலையில் சுமந்திரனின் ஆதரவுடன் கதிரையேறிய கரவெட்டி பிரதேசசெயலாளர்  தென்னிலங்கை அமைச்சர்களை அழைத்து வந்து திறப்பு விழாவை நடத்தியிருந்தார்.\

எனினும் வடமாகாண முதலமைச்சர் இந்நிகழ்வை புறக்கணித்துவிட்டார்.
இதனிடையே பிரபாகரனால் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட கிளர்ச்சிகள் தென்னிலங்கையில் இருந்தவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட கிளர்ச்சி அல்ல என்று உயர் கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

வடபுலத்தில் இருந்த பொருளாதார ஏற்றத்தாழ்வின் காரணமாக, பொருளாதாரத்தை பெருவாரியாக சுவீகரித்து கொண்ட ஒரு தரப்பினருக்கும், அல்லது அரசியல் தலைமையினருக்கும், சாதாரண மக்களிற்கும் இடையில் ஏற்பட்ட இடைவெளி, அல்லது பாரபட்சத்தை நீக்குவதற்காக உருவாக்கப்பட்டதாகவே, நான் கருதுகிறேன்.


எனினும் அப்போது அரசியல் தலைமை வகித்த அமிர்தலிங்கத்தின் கருத்துக்களை ஒட்டியே, வடக்கின் கிளர்ச்சிகள் ஒரு இனவாத கிளர்ச்சியாக, அல்லது இன ரீதியான பிரச்சினைகளாக உருவெடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

No comments