வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ள பிரதேசங்களைப் பார்வையிடவும், வீடியோ எடுக்கவும், “செல்பி” எடுக்கவும் வெளியிடங்களிலிருந்து வருவதைத் தவிர்ந்து கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அதிகாரியுமான ருவன் குணசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்வாறு வெளியிடங்களிலிருந்து பார்வையிட வருவது அனர்த்தங்களுக்குள்ளான மக்களுக்கும் அசௌகரியங்களை ஏற்படுத்துவதோடு, அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இடைஞ்சலாக இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிப் பொருட்களை எடுத்து வருபவர்கள் பிரதேச செயலகங்களில் அதனை ஒப்படைத்துவிட்டுச் செல்லுமாறும் அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்
Post a Comment