Header Ads

test

முல்லை அம்பலவன் பொக்கணையில் ஆயுதம் தேடும் இராணுவம்!


தமிழீழ விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இடங்களிலே முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அம்பலவன் பொக்கனை பகுதியில் ஆயுதம் தேடி நிலத்தைத் தோண்டும் நடவடிக்கையில் சிறிலங்கா இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை, கடந்த சில வருடங்களாக வன்னியில் பாதுகாப்புத் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த அகழ்வுப் பணிகள் தோல்வியில் முடிவுறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். புதுக்குடியிருப்பு சிறிலங்கா காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் அனுமதியுடன் சிறிலங்கா அதிரடிப்படையினர் மற்றும் படையினர் இணைந்து இந்த அகழ்வுப் பணியிணை மேற்கொண்டுள்ளனர்.

No comments