Header Ads

test

டி.பி.ஏக்கநாயக்க இன்று நிதி மோசடி விசாரணைப் பிரிவில்


கலாசார இராஜாங்க அமைச்சராக இருந்த வேளை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் வாகன முறைக்கேடு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்க இன்று நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகவுள்ளார்.

கடந்த 24 ஆம் திகதி அவரை நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வு இருந்தமை காரணமாக சமூகமளிக்க முடியாது என இராஜாங்க அமைச்சர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று காலை 10.00 மணிக்கு நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகவுள்ளதாக பின்னர் அறிவித்திருந்தார்.

No comments