மழையுடனான காலநிலையில் அதிகரிப்பு
இன்று பிற்பகல் இரண்டு மணியின் பின்னர் நாட்டின் அநேகமான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விசேடமாக மேல் , மத்திய , தென் மற்றும் ஊவா மாகாணங்கள் போன்று அம்பாறை , மட்டக்களப்பு , குருணாகலை போன்ற மாவட்டங்களில் சுமார் 100 மில்லி மீற்றர ்அளவில் கடும் மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அதேபோல் , புத்தளம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரை கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும ்என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது
Post a Comment