Header Ads

test

வவுனியா சிறைச்சாலையில் சிவசக்தி ஆனந்தன்!


வவுனியா சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.தியாகராஜா ஆகியோர் இன்று (நேரடியாக சென்று சிறைச்சாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடினர். வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் கைதிகளுக்கு எதிராக பல்வேறு அநீதிகள் இடம்பெறுவதாக அண்மையில் கைதி ஒருவர் வவுனியா நீதிமன்றத்தில் கூறியிருந்தார். இதனையடுத்து கைதிகளுக்கு எதிராக இடம்பெறும் அநீதிகளை கண்டித்தும் சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் பாவனை நடைபெறுவதாகவும் கூறி சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து சில கைதிகளை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் சிறைக்கைதிகள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர். இதுதொடர்பாக ஆராய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் எம்.தியாகராஜா ஆகியோர் விளக்கமறியல் சிறைச்சாலைக்கு சென்றிருந்தனர். இந்நிலையில் வவுனியா சிறைச்சாலைக்குள் போதைபொருள் பாவனையுள்ளதாக கைதிகள் தெரிவித்தாக சிவசக்தி ஆனந்தன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். “சிறைச்சாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடியதன் அடிப்படையில் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் 55 கைதிகளை மாத்திரமே தங்க வைக்க முடியும். இந்நிலையில் சுமார் 258 பேரை தங்க வைக்கின்ற நிலைமை காரணமாக இட வசதியின்மை ஏற்பட்டமையால் சிறைக்கைதிகளை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது” எனவும் தெரிவித்தார்.

No comments