Header Ads

test

அமெரிக்கத் தேசிய கொடிக்கு – தீ வைத்த ஈரான் நாடாளுமன்றம்!


ஈரானுடன் இருந்த அனுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொளவதாக அமெரிக்க அரசு அறிவித்ததை அடுத்து அந்த நாட்டு நாடாளுமன்றில் அமெரிக்கத் தேசிய கொடிக்குத் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2105ஆம் ஆண்டு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா காலத்தில் ஈரானுடன் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அமெரிக்காவை போலவே சீனா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளும் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இணைந்து கொண்டன. இந்த நிலையில், ஒப்பந்ததில் இருந்து அமெரிக்கா விலகுவதாக ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து அமெரிக்காவின் இந்த முடிவுக்கு ஆதரவாக இஸ்ரேல், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இந்த நிலையில் ஈரானின் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்க நாட்டின் கொடியை அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் வைத்த்துக் கிழித்து தீ வைத்து எரித்துள்ளனர் என்று பன்னாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

No comments