யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகவியலாளர் நடேசன் நினைவு நிகழ்வு!
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 14 வது நினைவு தினம் யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று நடைபெறவுள்ளது.
இன்று பிற்பகல் 4.15 மணியளவில் யாழ்ப்பாணம் பிரதான வீதி நீதிமன்ற கட்டத் தொகுதிக்கு அருகில் உள்ள கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவாக அமைக்கப்பட்ட தூபி அருகே இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.இங்கு ஊடகவியலாளர் நடேசனினை நினைவு கூரும் வகையில் தூபிக்கு மலர் மாலை அணிவித்து, தீபங்கள் ஏற்றி,நினைவேந்தலை நடத்த யாழ்.ஊடக அமையம் ஏற்பாடு செய்துள்ளது.

Post a Comment