Header Ads

test

காணாமல் போன மகள் மைத்திரியுடன் படத்தில்! - முறைப்பாடு செய்த தாயிடம் ரிஐடி விசாரணை


ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வின் தேர்­தல் பிரசார துண்­ட­றிக்­கை­யில், காணாமல் போன தனது பிள்­ளை­யின் படம் காணப்­ப­டு­வ­தா­கத் தெரி­வித்த தாயி­டம் பயங்­க­ர­வாத தடுப்­புப் பிரி­வி­னர் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ள­னர். வவு­னியா மாவட்­டத்­தில் காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வி­னர்­கள் தொடர்ச்­சி­யா­கப் போராட்­டம் நடத்தி வரு­கின்­ற­னர். அந்­தப் போராட்­டத்­தில் ஈடு­ப­டு­கின்ற இரண்டு தாய்­மார் கடந்த வாரம் கொழும்­பி­லுள்ள பயங்­க­ர­வாத தடுப்­புப் பிரி­வி­ன­ரால் விசா­ர­ணைக்கு அழைக்­கப்­பட்­ட­னர். இரண்டு தாய்­மா­ரும் தனித் தனி­யாக வெவ்வேறு நாள்­க­ளில் பயங்­க­ர­வாத தடுப்­புப் பிரி­வி­ன­ரால் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர். சுமார் 3 மணி நேரம் விசா­ர­ணை­கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

No comments