முள்ளிவாய்க்காலில் பிசுபிசுத்தது சந்திப்பு! பரஸ்பரம் மாறி மாறிக் குற்றச்சாட்டு!
வடமாகாணசபையினரின் குற்றச்சாட்டு
இன்று யாழ் பல்கலை மாணவர்களுக்கும் மாகாணசபை உருப்பினர்களுக்கிடைய்லான சந்திப்பு மாணவர்களின் வருகை இன்மையால் தொலைபேசி உரையாடல் மூலம் சில முடிவுகள் எடுக்கப்பட்டதாக வடமாகாணசபை உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
இதன்படி மக்களை ஒழுங்குபடுத்தல்களை மாணவர் சமுதாயம் ஏற்றுக்கொள்ளும் என்றும் பாதுகாப்புக்களையும் மாணவர் சமுதாயம் ஏற்கும் என்றும் முடிவெடுக்கப்பட்டது என அவர்கள் கூறியுள்ளனர்.
இதேவேளை இன்று நடைபெற இருந்த சந்திப்பில் மாகாணசபை அவைத்தலைவர் சிவஞானம் உருப்பினர்கலான அனந்தி, சிவாஜிலிங்கம், ரவிகரன் போன்றோரும் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். சந்திப்பு வருவதாக கூறியிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் எவரும் குறித்த சந்திப்பிற்கு இடத்திற்கே வரவில்லை.
காலை 10 மணி முதல் மாணவர்களுக்காக காத்திருந்ததாக வடமாகாணசபை சார்ப்பில் கூறப்படுகின்றது.
மாணவர்கள் தரப்பின் குற்றச்சாட்டு
இச்சந்திப்பு தொடர்பில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கிஸ்ணமேனன் தலைமையிலான மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவான கட்சிகள் மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் குறித்த இடத்திற்கு சற்றுத் தாமதமாகச் சென்றுள்ளனர் என கிஸ்ணமேனன் வழங்கிய காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் குறிப்பிடும்போது:- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் வடமாகாணசபை உறுப்பினர்களுடன் சந்திப்பதற்காக முள்ளிவாய்க்கால் வந்திருந்தோம். ஆனால் அங்கு வடமாகாணசபையைச் சேர்ந்த ஒருவரும் இருந்திருக்கவில்லை என கிஸ்ணமேனன் சுட்டிக்காட்டியுள்ளார். மாணவர்கள் தரப்பில் 13.00 மணிக்கு சந்திப்புக்காகப் பிரசன்னமாக இருந்துள்ளனர்.
மாணவர்கள் பல முறை சி.வி.கே சிவஞானம் மற்றும் ரவிகரன் ஆகியோருடன் செல்பேசியில் தொடர்பு கொள்ள முற்பட்ட போதும் அவர்களின் தொடர்புகள் கிடைக்கவில்லை என மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
Post a Comment