Header Ads

test

முதலமைச்சருடன் நெருங்கும் முஸ்லீம் பிரதிநிதிகள்!



தமிழரசுக்கட்சியின் முகவராக செயற்படும் வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மினை புறந்தள்ளி முதலமைச்சருடன் நெருக்கமான உறவை பேண முஸ்லீம் தரப்புக்கள் தயாராகிவருகின்றன.

வடமாகாண முதலமைச்சரிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது முன்னின்று செயற்பட்டவர்களுள் அஸ்மினும் ஒருவராவார்.

இந்நிலையில் வடக்கு முஸ்லீம்கள் தொடர்பில் முதலமைச்சர் அக்கறையுடன் செயற்படவில்லையென அஸ்மின் பிரச்சாரங்களை முஸ்லீம்களிடையே மேற்கொண்டு வந்திருந்தார்.

இந்நிலையில் கடந்த 04 ம் திகதி வெள்ளிக்கிழமை அஸ்மினிற்கு எதிராக  முஸ்லீம்களால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதுடன்; உருவப் பொம்மையும்  எரிக்கப்பட்டிருந்தது.

இந்த உருவப் பொம்மை எரிப்பை முழுக்க யாழ் மாவட்ட முஸ்லிம் மக்களே செய்தனர்.இந்த விடயத்தை அரசியலாக்க தற்போதைய மாகாண சபை போனஸ் உறுப்பினர் அயூப் அஸ்மீன்; மக்களை தவறான வழியில் திசை திருப்பமுற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.


இந்நிலையிலேயே வடக்கில் மீளக்குடியேறிய முஸ்லீம் மக்களது சார்பு பிரதிநிதிகள் முதலமைச்சருடன் நெருக்கமான உறவை பேணும் வகையில் சந்திப்பினை நடத்தியுள்ளனர். 

No comments