Header Ads

test

மண்வெட்டியால் வெட்டிய போதும், கைக்குண்டு வெடிக்காததால் தப்பினார் இளைஞன்!


திருகோணமலையில் கைக்குண்டு ஒன்றை இளைஞன் ஒருவர் மண்வெட்டியால் வெட்டிய போதும், அது வெடிக்காமையினால், உயிர் தப்பினார். திருகோணமலை ஐந்தாம் கட்டை பொது மயானத்தில் கைக்குண்டு ஒன்று மண்ணில் புதையுண்டிருந்த நிலையில், கிடந்துள்ளது. விபத்து ஒன்றில் உயிரிழந்த இளைஞன் ஒருவரின் பூதவுடலை நல்லடக்கம் செய்வதற்காக குழியொன்றை வெட்டிக் கொண்டிருந்த இளைஞர்களில், ஒருவர் மண்வெட்டியினால் மண்ணை வெட்டிய போது இந்த குண்டு வெட்டுபட்டுள்ளது. மண்வெட்டியினால் வெட்டப்பட்ட போது கைக்குண்டின் டெட்டனேட்டர் உடைந்து போன போனதால், குண்டு வெடிக்கவில்லை.இந்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றிற்கு அறிவித்து நீதிமன்றின் உத்தரவிற்கு அமைய குண்டு செயலிழக்கச் செய்யப்படும் எனவும் தற்பொழுது குண்டு விசேட அதிரடிப்படையினரின் பொறுப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments