Header Ads

test

இந்திய- சிறிலங்கா கடற்படைகள் நடுக்கடலில் நீண்ட பேச்சு


சிறிலங்கா- இந்திய கடற்படைகளுக்கிடையிலான, 29 ஆவது அனைத்துலக கடல் எல்லைக் கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.
காங்கேசன்துறைக்கு அப்பாலுள்ள கடலில், இந்தியக் கடற்படைக் கப்பலான சுமித்ராவில் நடந்த இந்தக் கூட்டத்தில், கடல்சார் பாதுகாப்பு, குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. 11 அதிகாரிகளைக் கொண்ட சிறிலங்கா தரப்புக்குழுவுக்கு வடபிராந்திய கடற்படைத் தளபதி றியர் அட்மிரல் முடித்த கமகே, தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு கடற்படை பிராந்தியத்துக்கான கட்டளை அதிகாரி றியர் அட்மிரல் அலோக் பட்னாகர் தலைமையிலான இந்திய அதிகாரிகள் குழுவில் 9 அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர்.

No comments