Header Ads

test

ஞானசார தேரரால் பாதிக்கப்பட்ட ஏனையவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும்! - சந்தியா எக்னலிகொட


ஞானசார தேரரால் தொந்தரவுக்கு உள்ளான அனேகமானோர் நாட்டில் உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கமான வெற்றி இது, அவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொடவை தாக்க முற்பட்டமை, அச்சுறுத்தியமை தொடர்பில், நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில், ஞானசார தேரர் நேற்று ஹோமாகம நீதிமன்றால் குற்றவாளியாக இணங்காணப்பட்டுள்ளார். இந்நிலையில், நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்திருந்த, ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி ​மேற்கண்டவாறு கருத்து தெரிவித்திருந்தார்.

No comments