Header Ads

test

பிரதி சபாநாயகர் பதவி தொடர்பில் கலந்துரையாடல்


பிரதி சபாநாயகர் பதவி தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்தாலோசித்து சபையில் அறிவிப்பதாக, சபாநாயகர் கருஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

அந்த பதவியில் இருந்து திலங்கசுமதிபால விலகியதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடம் இன்னும் நிரப்பப்படவில்லை.

இது தொடர்பில் நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதன்போது சபாநாயகர் இந்த பதிலை வழங்கினார்.

அதேநேரம், ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை தொடர்பில் நேற்றையதினம் விவாதம் இடம்பெற்றது.

இதில் உரையாற்றிய தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ், மலையக மக்களின் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் என கோரியுள்ளார்

No comments