முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு- ஒட்டுசுட்டான் வீதியில் கனரக வாகனம் ஒன்று நேற்றிரவு 8.30 மணியளவில் தீடீரென தீ பற்றி எரிந்து நாசமானது.
மன்னகண்டல் பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி சென்று கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று தீடிரென தீப்பற்றியது. வாகனத்தில் ஏற்பட்ட மின் ஒழுக்கினாலேயே தீவிபத்து ஏற்பட்டுள்ளது. என வாகன சாரதி தெரிவித்துள்ளார்.தீயை அணைக்கும் முயற்சியில் அந்தப்பகுதி பொதுமக்களும், படையினரும் ஈடுபட்டர். சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment