மாணவர்களை மிரட்டி பலவந்தமாக அழைத்து சென்ற அய்யூப் அஸ்மீன்!
யாழ்ப்பாணத்தில் நெல்லியடி பகுதியில் நடைபெற்று முடிந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் மே தினக்கூட்டத்திற்கு ஒஸ்மானியா கல்லூரி மாணவர்கள் பலவந்தமாகவே கோலாட்டம் நிகழ்விற்கு அழைத்து செல்லப்பட்டதாக அதிபர் சேகு குறிப்பிட்டார்.
மாணவர்கள் வெயிலில் வாடுவதாக சமூக ஊடகங்களில் வெளிவந்த புகைப்படத்தை ஆதாரமாக கொண்டு அதிபரை தொடர்பு கொண்ட ஊடகவியலாளரிடம் அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சம்பவ தினத்தன்று நேரம் ஒரு மணிக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு நிகழ்வு ஒன்றிற்கு (எந்த நிகழ்வு என்று சொல்லவில்லை) மாணவர்களின் கோலாட்டம் தேவை என கூறினார்.ஆனால் அதை மறுத்த நான் மாணவர்களை அனுமதிக்க முடியாது என தொலைபேசியை துண்டித்து விட்டேன்.தொடர்ந்து தொலைபேசியில் தொடர்பு கொண்ட மாகாண சபை உறுப்பினர் மிரட்டும் பாணியில் என்னுடன் நடந்து கொண்டார்.
இதற்கு நான் அஞ்சவில்லை.மாணவர்களை குறித்த நிகழ்விற்கு அனுப்பமுடியாது என கூறினேன்.ஆனால் தொலைபேசி துண்டிக்கபப்ட்டதும் பாடசாலை முன்றலில் வெள்ளை வேன் ஒன்று வந்தது.அதில் டொபாஸ் கடை நடாத்தும் நஸ்லீன் குழு வந்து என்னிடம் கேட்காது மாணவர்களை கடத்தி சென்றது என கூறினார். இதனால் நானும் அதிபர் பதவியில் இருந்து வெளியேற திர்மானித்துள்ளேன் என கூறினார்.
Post a Comment