Header Ads

test

விசேட நீதிமன்றம் அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதி- அமைச்சர் ராஜித


ஜனாதிபதி தேர்தலின்போது வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் ஒரு நடவடிக்கையே இந்த விசேட நீதிமன்ற சட்ட மூலம் என சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். வீரர் வசீம் தாஜுதீன், மிக் விமானக் கொள்வனவு, எக்னெலிகொட உள்ளிட்ட பல வழக்குகளின் சாட்சியங்களும் தடயங்களும் காணாமற்போயுள்ளன. இவை விசேட நீதிமன்றம் மூலம் துரிதப்படுத்தப்படும். அத்துடன், மத்திய வங்கி முறி விவகாரம் மற்றும் ஜனாதிபதி செயலக பிரதானி இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு ஆகிய சம்பவங்களும் இதில் விசாரிக்கப்படக்கூடும். விசாரிக்கப்படும் வழக்குகள் எது என்பதை பிரதம நீதியரசரே தீர்மானிப்பார் என்றும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்

No comments