Header Ads

test

காலநிலை அவதான நிலையத்தின் அறிவித்தல்


மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களுடன், காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் இன்றைய தினம் மழையுடனான காலநிலை நிலவும் என எதிர்பார்ப்பதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இதனுடன் மன்னர் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஊடாக மேல், மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடமேல் மாகாணங்களுடன், காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் மணிக்கு 50 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக அந்த நிலையம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டின் ஊடாக நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களில் மே 31 ஆம் திகதி வரை பலத்த காற்று வீசலாம் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது

No comments