Header Ads

test

இலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்ச டி சில்வாவில் தந்தை சுட்டுக்கொலை!


இரத்மலானை, ஞானேந்திர வீதியில் நேற்று இரவு 08.30 மணியளவில் இடம்பெற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தெஹிவளை - கல்கிஸ்ஸ மாநகர சபை உறுப்பினர் ரஞ்சன் டி சில்வா உயிரிழந்தார். உயிரிழந்தவர் இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையாவார். இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மூன்று பேர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை தகவல் தெரியவில்லை என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இதேவேளை தந்தையின் உயிரிழப்பு காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இடம்பெற உள்ள கிரிக்கட் தொடரில் இருந்து தனஞ்சய டி சில்வா விலகியுள்ளார்.

No comments