முல்லைத்தீவு செய்தி:இவ்வருடம் (2018), நடைபெற இருக்கின்ற ‘வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல்’ விழாவின்போது, வியாபார நிறுவனங்கள்/ நிலையங்கள் கவனிக்கவேண்டிய சில விதிமுறைகள் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. குறித்த அறிவித்தல் பின்வருமாறு., 01. தயாரித்த உணவுகள், ஐஸ்கிரீம், இனிப்பு, சிற்றுண்டி வகைகள் விற்பனைக்கு கொண்டுவருவோர், வெளியிடங்களில் உணவகம் வைத்திருந்து ஆலயத்தில் உணவக விற்பனையில் ஈடுபடவருவோர் அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளின் அனுமதிப்பத்திரம் வைத்திருக்க வேண்டும். அத்துடன் விற்பனையில் ஈடுபடும் அனைவரும் மருத்துவ சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். 02. ஆலயத்தில் மட்டும் உணவகம் நடாத்த வருவோர் 21.05.2018-ம் திகதிக்கு முன்பு, முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் நேரடியாக வந்து தொடர்பு கொள்ளவும். 03. காவடி உரிமையாளர்கள், அயடின் கரைசலில் செடில்களை கழுவிப்பயன்படுத்த வேண்டும். 04. தாகசாந்தி வழங்குவோர் மற்றும் சர்பத் விற்பனையாளர்கள் சில்வர், அலுமினியம் அல்லது கண்ணாடிப்பாத்திரங்களில் வழங்க வேண்டும். 05. அவ்வாறு பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் ஓடும் நீரில் கழுவி பயன்படுத்த வேண்டும். 06. குளிர்பானங்களுக்காக பயன்படுத்தப்படும் ஐஸ்கட்டிகள், உணவுக்காக அனுமதிக்கப்பட்ட ஐஸ்கிரீம் கடைகளில் மாத்திரம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுடன் அந்நிலையத்தின் பற்றுச்சீட்டு வைத்திருத்தல் வேண்டும். தகவல் – மேலதிக மாவட்ட செயலாளர், முல்லைத்தீவு.
Post a Comment