Header Ads

test

மாணவர்களது ஆளுமைக்கு கௌரவம்!


முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் மாணவர்கள் தலைகளில் பயணிக்கும் தமிழரசுக்கட்சியின் கனவு சிறடிக்கப்பட்டுள்ளது.

மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில்நடைபெறவுள்ள பிரதான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிழ்வை நடத்துவது தொடர்பில் யாழ்பல்கலைக்கழக மாணவர்களிற்கும் முதலமைச்சரிற்குமிடையில் இன்று மீண்டும் சந்திப்பொன்று நடைபெற்றிருந்தது.முக்கிய ஏற்பாட்டாளர்கள் சிலரும் சத்தமின்றி  பங்கெடுத்திருந்தனர்.

இதனை முன்னதாக அறிந்து கொண்ட தமிழரசுக்கட்சி தலைவர்கள் மாணவர்களை அழைத்து மைதான ஏற்பாடுகள் உள்ளிட்ட சிலவற்றை ஜனநாயகப்போராளிகள் அமைப்புடன் இணைந்து நடத்த விட்டுக்கொடுப்புக்களை செய்வதாக காண்பிக்க முற்பட்டனர்.

எனினும் ஜனநாயகப்போராளிகளை நிராகரித்த மாணவ பிரதிநிதிகள் தமது ஆளுமையை பேணமுற்பட்டனர்.

இந்நிலையில் முதலமைச்சர் மாணவ பிரதிநிதிகளை தன்னுடன் அழைத்து பேச்சுக்களை நடத்தியிருந்தார்.

முள்ளிவாய்க்காலில் இராணுவத்தினரும் வந்து அஞ்சலி செலுத்தலாமென்ற ஜனநாயகப்போராளிகளது கருத்துக்களை மேற்கோள் காட்டிப்பேசிய மாணவ பிரதிநிதிகள் அவர்களுடன் எவ்வாறு இணைந்து செயற்படுவதெனவும் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் நாளை மீண்டும் தனது கைதடி அலுலகத்தில் சந்திப்புக்கிற்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதனிடையே இன்று நாள் முழுவதும் முதலமைச்சர் மற்றும் மாணவர்களது நகர்வுகளை வேவு பார்த்த வண்ணம் தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் அவர்கள் சார்பு செய்தி முகவர்கள் சிலர் அலைந்து திரிந்தனர்.

இதனிடையே மாணவர்கள் வடமாகாணசபையிடையே முதலில் பிணக்கம் ஏற்பட ஒருசில ஊடகங்களே காரணமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாம். 

No comments