கட்டுத் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் பலி!
கட்டுத்துப்பாக்கி வெடித்து ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் வவுனியா, தம்பனையில் நேற்று (22.05.2018) நடந்துள்ளது. தம்பனையைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (வயது-–38) என்பவரே உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ரவிச்சந்திரனும், அவரது நண்பரும் நேற்றுக்காலை வேட்டைக்குச் சென்றுள்ளனர். அப்போது பொருத்தப்பட்ட கட்டுத்துப்பாக்கி திடீரென வெடித் துள்ளது. இந்தத் தகவல் ரவிச்சந்திரனின் நண்பரால் ஊர் மக்ளுக்கு அறிவிக்கப்பட்டது. ஊர் மக்கள் உடலை மீட்டு வவுனியா மருத்துவமனையில் சேர்ப்பித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment