Header Ads

test

அரசியல் நோக்கங்களுக்காக இராணுவத்தினரை பயன்படுத்த வேண்டாம்!


இராணுவத்தினர் தொடர்பாக அரசாங்கத்தின் மீது சுமத்தப்படும் அனைத்து குற்றச்சாட்டுக்களும அரசாங்கத்தை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் வகையில் முன்வைக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

'வயம்ப ரண அபிமன்' இராணுவ நினைவுத் தூபியை நேற்று திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் சர்வதேச உதவியுடன் இராணுவத்தினரின் கீர்த்தியை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசியல் மேடைகளில் தெரிவிக்கப்பட்ட மின்சாரக் கதிரைகளையும் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்வதற்கு வெளிநாட்டு நீதிபதிகளை கொண்டுவருவதையும் தற்போதைய அரசாங்கம் நிறுத்தியது.

இராணுவத்தில் இருந்த சிலர் வேறு சில நிகழ்வுகள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக கைது செய்யப்பட்டனர்.

எனினும், அது இராணுவத்தினருக்கு எதிரான செயற்பாடல்ல.

நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் போராடிய எந்தவொரு இராணுவத்தினருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்பட இடமளிக்காத அதேவேளை, அவர்களுக்கான உயரிய கௌரவத்தை பெற்றுக்கொடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.

அத்துடன், எந்தவொரு அரசியல் கட்சியும் தனது அரசியல் நோக்கங்களை அடைந்துகொள்வதற்கு இராணுவத்தினரை பயன்படுத்துவது பண்பாடல்ல என்று ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்

No comments