Header Ads

test

இரணைதீவிற்கு கிடுகு உதவி!



பூநகரி இரணைதீவு மக்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் அவர்களின் வழிகாட்டுதலில் கிடுகுகள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம் பூநகரி இரணைதீவில் இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்த்து குடியேறிய மக்களுக்கான அடிப்படை வசதிகள் எதனையும் அரசாங்கம் வழங்காத நிலையில் அந்த மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு வேண்டிய ஒரு தொகுதி உணவுப்பொருட்களை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் அவர்கள் புலம்பெயர்ந்த மக்களின் உதவியுடன் வழங்கியிருந்தார்.


உணவுப்பொருட்களை வழங்கும் போது இரணை தீவு மக்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் அவர்களிடம் தமக்கு குடிசைகள் அமைப்பதற்கு கிடுகுகளை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். மக்களின் கோரிக்கைக்கு அமைவாக இன்று தற்காலிக குடில்களை அமைப்பதற்காக 5000 மட்டை கிடுகுகள் முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாகவும் 5000 கிடுகுகளை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மக்களுக்கு வழங்கப்பட்ட கிடுகுகளுக்கான நிதி அனுசரணையை புலம்பெயர் தமிழ் அமைப்பான உறவுகளுக்கு கைகொடுப்போம் என்ற அமைப்பு வழங்கியிருந்தது.


No comments