பதவி விலகினார் ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.எச்.எம்.நவவி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் தமது பதவி விலகல் கடிதத்தை சிறிலங்கா நாடாளுமன்ற செயலர் தம்மிக திசநாயக்கவிடம் கையளித்துள்ளார். றிசாத் பதியுதீன் தலைமையிலான சிறிலங்கா மக்கள் காங்கிரசின் சார்பில், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனத்தின் மூலம் நவவி, நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார். உள்கட்சி முரண்பாடுகளை அடுத்தே இவர் பதவி விலகியுள்ளார் என்று கூறப்படுகிறது.
Post a Comment