கடந்த 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் 11 பேர் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான, நேவி சம்பத் என அழைக்கப்படும் கடற்படை அதிகாரியைக் கைது செய்ய பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கொட்டாஞ்சேனை, அரிப்பு, திருகொணமலை, தெஹிவலை, வலகம்பிட்டிய போன்ற பிரதேசங்களில் வெள்ளை வேன் மூலம் 11 மாணவர்களை கடத்தி தடுத்து வைத்து கப்பம் கோரியமை கொலை செய்தமை போன்ற சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை குற்றப்புலனாய்வு பிரிவு கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இவ்வாறு சந்தேக நபர்களை கைது செய்து விசாரணை நடாத்தி வருகின்ற நிலையில் மற்றுமொரு சந்தேக நபரான நேவி சம்பத் என்கிற முன்னாள் கடற்படை லெப்டினட் ஜெனரல் ஹெட்டியாராச்சி முதியன்சலாகே வந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி தலைமறைவாகியுள்ளார். இவ்வாறு தலைமறைவாகியுள்ள நேவி சம்பத்தை கைது செய்யவே பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.குறித்த சந்தேகநபரை அடையாளங் கண்டால் குற்றப்புலனாய்வு பிரிவு தொலைப்பேசி இலக்கமான 0112422176, 0112320141 மற்றும் 0112293621 என்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு தகவல் தருமாறு பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Post a Comment