அமைச்சர்கள் மீது மீண்டும் சட்டரீதியான விசாரணையாம்!
பதவி நீக்கம் செய்யப்பட்ட வடமாகாண முன்னாள் அமைச்சர்கள் 4 பேர் மீதும் உள்ள குற்றச்சாட்டுக்களை சட்டரீதியாக விசாரித்து, சட்டரீதியாக தண்டணை வழங்குவதற்காக மேலும் ஒரு விசாரணையை நடத்துவதற்காக பிரதம செயலாளரிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
வடமாகாணசபையின் 122வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போது வடமாகாண முன்னாள் அமைச்சர்கள் 4 பேர் மீது முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசாரணை குழு விசாரணை நடத்தியது. அந்த விசாரணை குழுவின் அறிக்கை வெளியாகிய பின்னரும், அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் விடயங்கள் தொடர்பாக மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. அதற்கான காரணம் என்ன என எதிர்கட்சி தலைவர் சி.தவராசா முதலமைச்சரிடம் வாய்மொழி மூல வினா ஒன்றை எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளிக்கும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது முதலமைச்சர் மேலும் கூறுகையில், கல்வி மற்றும் விவசாய அமைச்சுக்களின் செயலாளர்களை மாற்றம் செய்யாமல் நடத்தப்படும் விசாரணை பலனளிக்காது என்பதாலேயே நாம் அமைதியாக இருந்தோம். இப்போது அந்த அமைச்சுக்கள் இரண்டினதும் செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
ஆகவே இன்போது சட்டரீதியாக விசாரித்து குற்றவாளிகள் என்றால் சட்டரீதியாக தண்டணை வழங்குவதற்கான விசாரணை குழு ஒன்றுக்காக பிரதம செயலாளரிடம் பரிந்துரை செய்துள்ளேன் என்றார்.
Post a Comment