Header Ads

test

இறுதி ஏற்பாடுகளில் யாழ்.பல்கலை மாணவர்கள்!


முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கான ஏற்பாடுகளினில் வடமாகாண முதலமைச்சர் வழிநடத்தலில்,பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.


வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் இன்று நேரடியாக முள்ளிவாய்க்கால் மாணவ பிரதிநிதிகளை ஊக்குவித்திருந்தார்.நாளை மேலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் களமிறக்கப்பட்டு வருகை தரும் மக்களிற்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி வழங்க முயற்சிகள் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மாணவர்களது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாட்டிடத்திற்கு சொகுசு வாகனங்களில் வந்திருந்த சிலர் தம்மை ஜனநாயகப்போராளிகளென கூறி மாணவர்களுடன் முறுகலிற்கு முற்பட்டுள்ளனர்.

அவர்களது நோக்கம் கூட்டு நினைவேந்தலை தடுப்பதாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.  

அவர்களை வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன்,மற்றும் உறுப்பினர் து.ரவிகரன் ஆகியோர் தூண்டிவிட்டதாக மாணவர்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

எனினும் ஏற்கனவே முதலமைச்சருடன் நடத்திய கூட்ட தீர்மானப்பிரகாரம் மாணவர்கள் இணைந்த நினைவேந்தலிற்கு தயாராகிவருகின்றனர்.

No comments