Header Ads

test

பணமோசடியில் ஈடுபட்ட அஞ்சலதிபர் விளக்க மறியலில்!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த  அஞ்சலதிபரொருவர் பண மோடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட நிலையில்  கைது செய்யப்பட்டதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் அனுராதபுரம் பகுதியில் கடமையாற்றி வந்த நிலையில், வர்த்தகர் ஒருவரிடமிருந்து 45 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

45 இலட்சம் ரூபா பண மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அஞ்சலதிபரே எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments