Header Ads

test

ஸ்ரீ ல.சு.க.யின் செயலாளர் பதவிக்கு எஸ்.பீ.யின் பெயர் முன்மொழிவு


ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தற்காலிக நிருவாகிகள் சபைக்கு பொதுச் செயலாளராக முன்னாள் அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்கவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எஸ்.பீ. திஸாநாயக்க எதிர்வரும் நாட்களில் கட்சியின் தலைமையகத்துக்குச் சென்று அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. இவர் இதற்கு முன்னரும் கட்சியின் செயலாளர் பதவியை வகித்தவர். தற்போதும் கட்சியில் பொறுப்பு வகிக்கின்றார். எது எவ்வாறிருப்பினும், கட்சிக்கான அதிகாரிகளை நியமிக்கும் இறுதி அதிகாரம் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருப்பதாகவும், எதிர்வரும் 3 ஆம் திகதி கட்சியின் புதிய நிருவாக சபை தெரிவு இடம்பெறவுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன

No comments