Header Ads

test

மழை அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்


நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை இன்று (04) முதல் மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி, நாட்டின் பல பகுதிகளிலும் பிற்பகல் 2.00 மணி முதல் 100 மி.மீ. இற்கும் அதிகமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, நாட்டின் மேல், வடமேல் மற்றும் தென்பகுதியின் கடலோர பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது

No comments