முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு வடக்கின் 5 மாவட்டங்களிலிருந்தும் பேருந்துகள் செல்லவுள்ளன. பேருந்துகள் புறப்படும் இடம், செல்லும் பாதை தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் அனைத்துப் பேருந்துகளும் காலை 7.30 மணியளவில் முள்ளிவாய்க்காலுக் குப் புறப்படும். காரைநகரில் இருந்து ஒரு பேருந்து சுழிபுரம் ஊடாக சங்கானை, சண்டிலிப்பாய், மானிப்பாய் வழியே முள்ளிவாய்க்கால் செல்லும். கட்டக்காட்டில் இருந்து (வடமராட்சி கிழக்கு) மருதங்கேணி ஊடாக ஒரு பேருந்து முள்ளிவாய்க்கால் செல்லும். அச்சுவேலி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து புறப்பட்டு கோப்பாய் கைதடி வீதி வழியே முள்ளிவாய்க்கால் சென்றடையும். தொண்டமனாறுச் சந்தியிலிருந்து ஒரு பேருந்து புறப்பட்டு வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, நெல்லியடி ஊடாகப் புதுக்காடு சென்று முள்ளிவாய்க்கால் சென்றடையும். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலிருந்து 2 பேருந்துகள் முள்ளிவாய்காலை நோக்கிப் புறப்படும்.
வவுனியாசெட்டிகுளம் பிரதேச சபை முன்னால் இருந்து காலை 8.30 மணிக்கு ஒரு பேருந்து முள்ளிவாய்க்கால் நோக்கிப் புறப்படும். வவுனியா பேருந்து நிலையத்தில் இருந்து மூன்று பேருந்துகள் காலை 8.30 மணிக்கு முள்ளிவாய்க்கால் நோக்கிப் புறப்படும்.
மன்னார்அடம்பனிலிருந்து காலை 7 மணிக்கு முள்ளிவாய்க்கால் நோக்கிப் பேருந்து புறப்படும். தலைமன்னாரில் இருந்து பேருந்து காலை 7 மணிக்குப் புறப்பட்டு பேசாலை, தாழ்வுபாடு ஊடாக முள்ளிவாய்க்கால் நோக்கிச் செல்லும். கீரியிலிருந்து காலை 7 மணிக்குப் புறப்படும் பேருந்து எழுத்தூர் மன்னார் வழியாக முள்ளிவாய்க்கால் நோக்கிச் செல்லும். நானாட்டான் சந்தியிலிருந்து காலை 7 மணிக்குப் பேருந்து முள்ளிவாய்க்கால் நோக்கிப் புறப்படும். மடுவிலிருந்து காலை 7 மணிக்கு பேருந்து முள்ளிவாய்க்கால் நோக்கிப் புறப்படும்.
கிளிநொச்சிகிளிநொச்சி டிப்போ சந்தியிலிருந்து இரண்டு பேருந்துகள் 9 மணிக்கு முள்ளிவாய்க்கால் நோக்கிப் பயணிக்கும். கந்தசாமி கோயிலடியிலிருந்து 9 மணிக்கு ஒரு பேருந்து முள்ளிவாய்க்கால் நோக்கிப் புறப்படும்.பரந்தன் சந்தியிலிருந்து காலை 9 மணிக்கு ஒரு பேருந்து புறப்படும்.
முல்லைத்தீவுதேவிபுரம் சந்தியிலிருந்து காலை 9 மணிக்கு பேருந்து முள்ளிவாய்க்கால் நோக்கிப் புறப்படும். உடையார்கட்டு சந்தியிலிருந்து காலை 9 மணிக்கு பேருந்து முள்ளிவாய்க்கால் நோக்கிப் புறப்படும்.புதுக்குடியிருப்பு சந்தியிலிருந்து காலை 9 மணிக்கு பேருந்துகள் இரண்டு முள்ளிவாய்க்காலை நோக்கிப் புறப்படும் விசுவமடு சந்தியிலிருந்து காலை 9 மணிக்கு பேருந்து முள்ளிவாய்க்கால் நோக்கிப் புறப்படும். துணுக்காய் பேருந்து நிலையத்திலிருந்து காலை 8.30 மணிக்கு பேருந்து ஒன்று முள்ளிவாய்க்கால் நோக்கிப் புறப்படும் ஒட்டுசுட்டான் சந்தியிலிருந்து காலை 9 மணிக்கு பேருந்து முள்ளிவாய்க்கால் நோக்கிப் புறப்படும். கொக்கிளாயிலிருந்து காலை 9 மணிக்கு பேருந்து முள்ளிவாய்க்கால் நோக்கிப் புறப்படும். முல்லைத்தீவு நகரிலிருந்து இரண்டு பேருந்துகள் முள்ளிவாய்க்கால் நோக்கி காலை 9 தொடக்கம் மு.பகல் 11 மணி வரை தொடர்ச்சியாகப் பேருந்து சேவையை நடைமுறைப்படுத்தும். அனைத்து மாவட்டங்களிலும் இருந்து வரும் மக்கள் அவர்கள் வந்த அதே பேருந்தில் திரும்பிச் செல்லவேண்டும். வேறு வாகனங்களை நாடாமல் வந்த வாகனத்தையே அடையாளம் வைத்து பயணிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் – என்று முதலமைச்சர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Post a Comment