மின்சாரம் தாக்கி தந்தை,மகன் பலி!
வடமராட்சி கரணவாய் பகுதியில் மின்சாரம் தாக்கி தந்தை மற்றும் மகன் என இருவர் பரிதாபகரமாக இன்று காலை உயிரிழந்துள்ளனர்.
தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் தீவிர ஆதரவாளரும் உறுதியான தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினருமான ஜெகநாதன்( வயது 64) மற்றும் அவரது மூத்த மகனுமே அகால மரணமடைந்துள்ளனர்.
குhலை மழை பெய்ந்து கொண்டிருந்த வேளை மின்னிணைப்பு ஒன்றினை சரிபார்க்க முற்பட்ட தந்தையாரை மின்சாரம் தாக்கியுள்ளது.தந்தையாரை காப்பாற்ற மகன்கள் சென்றிருந்த நிலையில் அவர்களும் மின்சாரத்தால் தாக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுள்; ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க மற்றையவர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையினில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Post a Comment