மீண்டும் யாழ்ப்பாணம் வருகின்றார் பிறேமசங்கர்!
அரசியல் பழிவாங்கலால் யாழ்ப்பாணத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்ட மேல்நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு திரும்பவுள்ளார். மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன், அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும்மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகிய மூவருக்கும் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
வருடாந்த இடமாற்றத்தின் கீழ் மூன்று ஆண்டுகள் ஒரே மாகாண மேல் நீதிமன்ற அமர்வில் கடமையாற்றியதன் அடிப்படையில் நாடு முழுவதும் மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம்வழங்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக மாற்றம்பெற்றுள்ளார்.
திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாகமாற்றம் பெற்றுள்ளார்.
வவுனியா மேல் நீதிமன்றநீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியாக மாற்றம்பெற்றுள்ளார்.
மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற சிறீநிதிநந்தசேகரன், கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதியாக என்.எம்.எம் அப்துல்லா நியமிக்கப்படுகிறார்.
சட்டமா அதிபர் திணைக்களமூத்த அரச சட்டவாதி டெனிஸ் சாந்தன் சூசைதாஸன், கல்முனை மற்றும் மட்டக்களப்பு குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றங்களின் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருடன் இணைந்து கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதிசிறிநிதி நந்தசேகரனும் கடமையாற்றவுள்ளார்.
நெருக்கடியான சூழலில் சாவகச்சேரி,பருத்தித்துறை உள்ளிட்ட நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியிருந்த அன்னலிங்கம் பிறேமசங்கர் அரசியல் பழிவாங்கலாக ரெமீடியஸ் மற்றும் சிறீகாந்தா ஆகியோரது தூண்டுதலில் யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதியாக இருந்திருந்த நிலையில் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Post a Comment