Header Ads

test

தேராவிலில் படையினரின் மின்சார இணைப்பில் சிக்கி காட்டு யானை மரணம்!


முல்லைத்தீவு- விசுவமடு தேராவில் பகுதியில் காட்டு யானை ஒன்று நேற்றுக்காலை படையினரின் மின்சார இணைப்பில் சிக்கி உயிரிழந்தது. இப்பகுதியில் 68 ஆவது படைப்பிரிவினர் விவசாய நடவடிக்கைகளுக்காக மின்சார இணைப்பை வழங்கியுள்ளனர். இதில் சிக்கியே யானை உயிரிழந்தது. யானையின் உடலை பரிசோதனை மேற்கொண்ட வடபிராந்திய வனஜீவராசிகள் திணைக்களத்தின் கால்நடை மருத்துவ உத்தியோகத்தர் பா.கிரிதரன், யானை மின்சாரம் தாக்கியே உயிரிழந்துள்ளது. குறித்த யானை 35 அகவையுடையது. இது இன்னும் நீண்ட காலம் வாழக்கூடியது என்றும் வடக்கில் இவ்வாறான இன யானைகள் மூன்றையே காட்டில் கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments