Header Ads

test

டக்ளஸே யாழ்.மாநகரசபையுடன் பேசவேண்டும்!

சர்ச்சைக்குரிய யாழ்.மாநகரசபையின் கடைத்தொகுதி பிரச்சினைகளிற்கு தீர்வுகளை பெற்றுத்தர தனக்கு மூன்று மாத கால அவகாசத்தை கோரியுள்ளார் அக்கட்டட ஒப்பந்தகாரரான சுப்பிரமணியம் மனோகரன்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று சனிக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் கருத்து தெரிவிக்கையில் அரசியல்வாதிகளால் தனது இலாபம் முற்றாக பறிபோய்விட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியிலுள்ள குறித்த கடைத்தொகுதியின் தற்போதைய பெறுமதி அறுபதி கோடியாகும்.அங்கு அமைக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்களில் 150 இற்கும் குறையாத தொழிலாளர்கள் பணியாற்றிவருகின்றனர்.யாழ்.மாநகரசபை தற்போது மாதாந்தம் 18 இலட்சம் வரையில் வருமானத்தை பெற்றுவருகின்றது.

3ம் மாடியல் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள இடம் தொடர்பில் மகேஸ்வரி நிதியத்தின் தலைவரான டக்ளஸ் தேவானந்தாவே யாழ்.மாநகரசபையுடன் பேசி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அப்பகுதியினை மகேஸ்வரி நிதியத்திற்கே ஒப்பந்த அடிப்படையில் ஒதுக்கி வழங்க தீர்மானிக்கப்பட்டது.ஆனால் இது தொடர்பில் யாழ்.மாநகரசபையிடம் விண்ணப்பித்த போது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கவில்லை.முதலமைச்சர் 3ம் மாடியினை அவ்வாறு வழங்க சம்மதம் தெரிவித்திருக்கவில்லையென அதற்கு யாழ்.மாநகரசபையால் விளக்கம் தரப்பட்டிருந்தது.

அதனால் தற்போது குறித்த கட்டடம் ஒதுக்கப்பட்டமை தொடர்பில் மகேஸ்வரி நிதிய தலைவரான டக்ளஸ் தேவானந்தா தான் யாழ்.மாநகரசபையில் பேச வேண்டும்.

தேவையெனில் யாழ்.மாநகரசபையின் கடைத்தொகுதி பிரச்சினைகளிற்கு தீர்வுகளை பெற்றுத்தர தனக்கு மூன்று மாத கால அவகாசத்தை கோரியுள்ளார் அக்கட்டட ஒப்பந்தகாரரான சுப்பிரமணியம் மனோகரன்.

No comments