புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதிப்பகுதியில் தீடீர் தீபரவல்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள கடும் வரட்சி மற்றும் அதிகரித்துள்ள வெப்பநிலை மாற்றத்தினால் வனப்பகுதிகளில் தீ பரவல்கள் நடந்தேறிவருகின்றன.
கடும்வெப்பம் காரணமாக இந்த தீபரவல்கள் இடம்பெறுகின்றன.
குறிப்பாக பெரும் காட்டுப்பகுதிளாக காணப்படும் இடங்கள் மற்றும் தேக்கமர சோலைகளின் கீழ் இந்த தீபரவல்கள் இடம்பெற்றுள்ளன.
இன்னிலையில் நேற்று புதுக்குடியிருப்பிற்கும் மன்னாகண்டல் சந்திக்கும் இடைப்பட்ட பகுதி காட்டில் திடீரென தீப்பரவல் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இச்சம்பத்தினை புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தெரியப்படுத்தியவேளை புதுக்குடியிருப்பு பொலிஸார் வந்து குறித்த தீயினை பரவவிடாமல் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளார்கள்.
Post a Comment