Header Ads

test

சிறிலங்கா அதிபரிடம் மன்னிப்புக் கோரினார் சரத் பொன்சேகா


சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மன்னிப்புக் கோரியுள்ளார். அமைச்சரவை மாற்றத்துக்குப் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர் சரத் பொன்சேகா, மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல், சிறிலங்கா அதிபரே அவரைக் காப்பாற்றி வருவதாக குற்றம்சாட்டியிருந்தார். அத்துடன் சிறிலங்கா அதிபர் தொடர்பாக பல்வேறு கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்திருந்தார். அத்துடன் ஐதேக மே நாள் பேரணியிலும் சிறிலங்கா அதிபரை சரத் பொன்சேகா காட்டமாக விமர்சித்திருந்தார். இதனால் ஆளும் கூட்டு அரசாங்கத்துக்குள் மீண்டும் விரிசல்கள் ஏற்படும் சூழ் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் சிறிலங்கா அதிபரைச் சந்தித்த அமைச்சர் சரத் பொன்சேகா மற்றும் ஐதேக அமைச்சர்கள் சிலர், அவரிடம் மன்னிப்புக் கோரியுள்ளனர்.

No comments