Header Ads

test

அமெரிக்க இராணுவ விமானம் விபத்து! ஐவர் பலி!

அமெரிக்க இராணுவத்துக்கு சொந்தமான சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த ஐந்து இராணுவ வீரர்களும் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் ஜோர்ஜியா நகரில் நேற்று செவ்வாய்கிழமை இராணுவ வீரர்கள் விமான பயிற்சியில் செய்து கொண்டிருந்தனர். ஹெர்குலஸ் என்ற சி-130 ரக விமானத்தில் ஐந்து ராணுவ வீரர்கள் பயணம் செய்தனர். காலை 11:30 மணியளவில் சாவன்னா விமான நிலையம் அருகில் அந்த விமான சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அந்த விமானத்தில் பயணம் செய்த ஐந்து இராணுவ வீரர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சமீப காலமாக அமெரிக்காவில் ராணுவ விமானங்கள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த மாதம் ஏற்பட்ட ராணுவ விமான விபத்துகளில் சிக்கி ஐந்து ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments