Header Ads

test

சிறிலங்கா படைகளுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை பலப்படுத்த அமெரிக்கா ஆர்வம்

சிறிலங்கா படைகளுடனான உறவுகளை மேலும் பலப்படுத்திக் கொள்வதில் அமெரிக்கா ஆர்வம் கொண்டுள்ளதாக, சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே,  அவர் இதனைக் கூறியுள்ளார்.
எமது பாதுகாப்பு ஒத்துழைப்பை சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் நன்மையளிக்கும் வகையில், விரிவாக்கிக் கொள்வதை அமெரிக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 29ஆம், 30ஆம் நாள்களில், அமெரிக்க பிரதிநிதிகள் சபையின், உறுப்பினர்கள்- ஆயுதப்படை சேவைகள் குழுவின் தலைவர் மக் தோன்பெரி தலைமையில்,  சிறிலங்காவில் பயணம்  மேற்கொண்டிருந்தது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே அமெரிக்க தூதுவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

No comments