நீர்வேலியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று தெரிவிக்கப்படும் முக்கிய சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸார் நேற்று தாவடிப் பகுதியில் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் ஆவா குழுவைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. கொக்குவில் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவரே கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகள் அதிகரித்ததை அடுத்து யாழ்ப்பாணப் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்கசரின் கீழ் ஒப்பரேசன் ஆவா என்ற பொலிஸ் குழு உருவாக்கப்பட்டது. அந்தக் குழுவே தாவடியில் சந்தேநபரைக் கைது செய்தது என்று கூறப்படுகின்றது
Post a Comment