யாழ். ஆசிரியை மீதான வாள்வெட்டு: ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம்!
யாழ். கொக்குவில் பகுதியில் திங்கட்கிழமை(01) பிற்பகல் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கிருந்த நடன ஆசிரியை மற்றும் அவரது தாய் மீது வாளால் வெட்டித் தாக்குதல் நடாத்தியுள்ளது.
இதன்மூலம் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதுகாப்பின்மை குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்தச் சம்பவம் தொடர்பாகத் தொடர்புபட்டவர்கள் குறித்து ஆதாரங்களும் கிடைத்துள்ள நிலையில் பொலிஸார் உடனடியாகக் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
Post a Comment