சிறிலங்கா அதிபரின் செயலக தலைமை அதிகாரி மகாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபன தலைவர் திசநாயக்க ஆகியோரால் பெறப்பட்ட இலஞ்சப் பணத்தில் ஒரு பகுதி முக்கிய பிரமுகர் ஒருவருக்கும் பங்கிடப்படவிருந்ததாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கந்தளாய் சீனித் தொழிற்சாலையை செயற்படுத்துவதற்கான அனுமதிகளை பெற்றுக் கொள்வதற்கு, இந்திய வணிகர் ஒருவரிடம், 20 மில்லியன் ரூபா இலஞ்சப் பணத்தைப் பெற்ற போது, மேற்படி அரச அதிகாரிகள் இருவரும், இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பேரத்துடன் முக்கிய பிரமுகர் ஒருவரும் தொடர்புபட்டுள்ளார் என்று தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட அதிகாரிகளால் பெறப்பட்ட பணத்தின் ஒரு பகுதி அந்த முக்கிய பிரமுகருக்கும் பகிரப்படவிருந்தது என்றும் தெரியவந்திருப்பதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் குறிப்பிட்டுள்ளது.
Post a Comment